Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வில்லன் கேரக்டரில் நடிக்கும் அஜித்?… ‘தல 61’ தெறி மாஸ் அப்டேட்…!!!

தல 61 படத்தில் நடிகர் அஜித் வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இதே கூட்டணியில் ‘வலிமை’ படம் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

Ajith's next to be directed by H Vinoth?- Cinema express

தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தல 61 படத்தில் நடிகர் அஜித் வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் வில்லனாக நடித்த மங்காத்தா, பில்லா போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மீண்டும் அஜித் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |