உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய அமைச்சரின் மகன், விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரியானாவில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் நாராயண்கன் என்ற இடத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் விவசாயிகள் மீது பாஜக எம்பி நயாப் சைனி கார் மோதியதில் விவசாயி ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories