Categories
மாநில செய்திகள்

மீண்டும் வெடித்த ‘கர்ணன்’ பட சர்ச்சை…. உதயநிதி ஸ்டாலின் ட்வீட்….!!!!

‘கர்ணன்’ திரைப்படத்தில் 1995 அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடியங்குளம் சம்பவம் 1997 திமுக ஆட்சியில் நடந்தது போல காட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜுடன் உதயநிதி பேசியதை தொடர்ந்து படத்தில் குறிப்பிடப்பட்ட ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உதயநிதி இது குறித்து ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவில், “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் – இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர். படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர்.

அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் ’90-களின் இறுதியில்’ என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |