Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வெற்றிமாறனோடு இணையும் ஆண்ட்ரியா… வெளியான தகவல்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை . இந்த படம் மிகப் பெரிய ஹிட்டானது . இந்த படத்தின் மொத்த கதையும் சந்திராவாக வரும் ஆண்ட்ரியா தன் கணவனாக வரும் அமீரின் மரணத்திற்காக பழிவாங்குவதாக அமைந்து இருக்கும். இந்த படத்தில் நடித்த ஆண்ட்ரியாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக வெளியான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு குரல் கொடுத்த ஆண்ட்ரியா, வெற்றிமாறனோடு இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |