பிரான்ஸ் நாட்டு பிரதமர் நாடு முழுவதும் ஊரடங்கு டிசம்பர் வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ம் தேதி பொது முடக்கம் அறிவித்தது. பிரான்சில் இதுவரை 19.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து ஊரடங்கு அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக டுவிட்டர் செய்தியில் பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கடந்த வாரத்தில் கொரோனோவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளென்றுக்கு 500 ஆக அதிகரித்துள்ளதாக மற்றொரு ட்விட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார் . இதனால் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை கடினமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.