Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை… மத்திய சுகாதாரத்துறை மந்திரி கருத்து…!!!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் நோய் தொற்றும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் மத்திய அரசு மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமாக கொரோனா பெருந்தொற்று சிறப்பாக கட்டுப்படுத்த முடிந்தது. மேலும் 200 கோடிக்கும் அதிகமான  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் சூழலை மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் பண்டிகைகள் வர இருப்பதால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும். மேலும் சர்வதேச சுற்றுலா பயணிகளை பொருத்தவரை இங்கு வருகை தரக்கூடிய அனைத்து பயணிகளையும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |