Categories
உலக செய்திகள்

“மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா”…. முக கவசம் அணிய மக்களுக்கு அறிவுரை….!!!!!!!!!!!

ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு அரசு தரவுகளின் படி ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் நோயாளிகள் கொரோனா தொற்று உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் சுற்றுலா மீண்டும் வளர்ந்து வருகின்ற நிலையில் அங்கு தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பது அந்த நாட்டு அரசை மிகவும் கவலை அடைய செய்திருக்கிறது.

எனினும் சுற்றுலா பயணிகளிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு அரசு எதிர்ப்பு போராட்டங்களையும் தூண்டும் என்ற காரணத்தினால் புதிய கட்டுப்பாடுகள் எதையும் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு கொண்டுவரவில்லை. அதே நேரம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசங்களை பயன்படுத்தும் படி மக்களை அரசு அறிவுறுத்தி வருகிறது.

Categories

Tech |