நடிகர் சூரி மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படம் மூலம் விடுதலை திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் சூரி.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகின்றது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சூரி மீண்டும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். அந்த படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.