Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 144 தடை அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவ தொடங்கியது. அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் காரணமாக தான் இந்த ஊரடங்கு போடப்பட்டது. இதற்கு முன்னதாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட்டில் கொடி மற்றும் ஒலி பெருக்கி பொருத்துவது குறித்து இரு சமூகங்கள் சமூகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் கொடி மற்றும் பேனரை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மற்ற சமூகத்தினர் ஆத்திரமடைந்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு சமூகத்தினரும் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிய போது வாகனங்கள் சேதமடைந்தது. அதுமட்டுமில்லாமல் போலீஸ் மீதும் கற்கள் வீசப்பட்டது. அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகரில் தர்காவில் அனுமன் சிலையை நிறுவுவது குறித்து இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் எம்பியின் பழைய கோர்ட் பகுதியில் நடைபெற்றது. இதனால் நீமுச் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டுவர்களை ஒருவர் கற்களை வீசி கொண்டனர். அப்போது இந்த மோதலில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

Categories

Tech |