Categories
தேசிய செய்திகள்

மீண்டு வந்தார் வாவா சுரேஷ்….!! பாம்பு பிடிப்பதில் வல்லவர்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்திலுள்ள குறிச்சி பகுதியில் பாம்பினை பிடித்து சாக்கு பையில் போடும்போது அந்த பாம்பின் கடிக்கு ஆளானார். இதனால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட வாவா சுரேஷ் தற்போது தொடர் சிகிச்சைக்கு பின்னர் கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளார். பாம்பு கடிப்பது சுரேஷுக்கு முதல் தடவை அல்ல ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட முறை சுரேசை பாம்பு தீண்டி உள்ளது.

தீவிர சிகிச்சை வரை சென்று நலமுடன் வீடு திரும்பியுள்ளார் வாவா சுரேஷ். இந்நிலையில் தற்போது மீண்டும் பாம்பு கடித்து கோமா நிலை வரை சென்று திரும்பியுள்ளார். கேரளாவிலுள்ள பாம்பு பண்ணையில் அரசு வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு மக்களை பாம்புகளிடம் இருந்து காப்பாற்றுவது தன்னுடைய முதல் பணி எனக் கூறி அவர் இந்த வேலையை இவர் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பாம்பு கடியில் இருந்து மீண்டும் காப்பாற்றப்பட வேண்டும் என அரசியல் பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் அவருக்காக இணையதளங்களில் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர் கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

Categories

Tech |