Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டு வா சென்னையே…! ”அதிகமாகும் மீள்வோர் எண்ணிக்கை” நம்பிக்கையுடன் மக்கள் …!!

சென்னையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் பட்டியலை மண்டல வாரியாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் கொரோனாவின் தாக்கம் சிறிதும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா வின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. அதனால் பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவை தடுப்பதற்காக கிருமிநாசினிகள் தெளிப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொண்டு வருகிறது. அதனால் கோடம்பாக்கம், அண்ணாநகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து அவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தை கடந்து இருந்தது.

தற்போது தேனாம்பேட்டையிலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.சென்னையில் தற்போது வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து நான்கு நபர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அதில் 90 ஆயிரத்து 966 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதில் மீதமுள்ள 11,811 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் கொரோனாவால் 2277 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் பட்டியலை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது.

  • கோடம்பாக்கம் – 10,625 பேர்
  • அண்ணா நகர் – 10,472 பேர்
  • ராயபுரம் – 10,509 பேர்
  • தேனாம்பேட்டை – 10,065 பேர்
  • தண்டையார்பேட்டை – 8,923 பேர்
  • திரு.வி.க. நகர் – 7,320 பேர்
  • அடையாறு – 6,457 பேர்
  • வளசரவாக்கம் – 4,952 பேர்
  • அம்பத்தூர் – 4,893 பேர்
  • திருவொற்றியூர் – 3,322 பேர்
  • மாதவரம் – 2,904 பேர்
  • ஆலந்தூர் – 2,816 பேர்
  • சோழிங்கநல்லூர் – 2,079 பேர்
  • பெருங்குடி – 2,577 பேர்
  • மணலி – 1,659 பேரும் குணமடைந்துள்ள சம்பவம் மாநிலத் தலைநகரான சென்னை கொரோனாவிலிருந்து மீண்டு வருவதற்கான தன்நம்பிக்கையை அளித்துள்ளது.

Categories

Tech |