இட்லி மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி – ஆறு
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – அரை சிட்டிகை
கறி மசாலா பொடி – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்நெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கி வைத்திருக்கும் இட்லி துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
கடாயில், தேவையான அளவு எண்ணெய் விட்டு இஞ்சிப்பூண்டு விழுது, 2 பெரிய வெங்காயம், 2 தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் அத்துடன் மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினமோட்டோ, மிளகாய்த்தூள், கறிமசாலா பொடி, உப்பு (தேவையான அளவு) சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன்பின் பொரித்து வைத்த இட்லி துண்டுகளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி பச்சை கொத்தமல்லி தூவி இறக்கினால் இட்லி மஞ்சூரியன் ரெடி.