Categories
அரசியல்

மீதி 4 ஓட்டு போடாத…. அந்த 4 பேருக்கும் ரொம்ப நன்றி…. திமுக பிரமுகர் கருத்து…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது. இதில் “ஓவர் நைட்டில் உங்க அண்ணன் ஒபாமா” என்பது போல கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி வார்டு ஒன்றியத்தில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் அம்பாசிடர் கார் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். இவருடைய குடும்பத்தில் மட்டுமே 5 ஓட்டுகள் உள்ள நிலையில் ஒரு ஓட்டு மட்டுமே பெற்று தோல்வியடைந்ததையடுத்து ஒத்த ஓட்டு பாஜக என்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

ஆனால் உண்மை என்னவென்றால் அந்த பாஜக நிர்வாகி போட்டியிட்ட பகுதியில் அவருடைய குடும்பத்தினரால் ஓட்டு போட முடியாது. அதாவது கார்த்தியை தனக்கு வாக்கு இருக்கும் வார்டில் போட்டியிடாமல் வேறு வார்டில் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தன்னுடைய டுவிட்டர் பதிவில், ஒத்த ஓட்டு பெற்ற பாஜக வேட்பாளர் குடும்பத்தில் உள்ள பிற நான்கு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |