Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீத்தேன் கியாஸ்: 9.12 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இப்போது மத்திய அரசின் பல எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக வீடுகளுக்கு எல்.பி.ஜி. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் வாயிலாக மீத்தேன் சமையல் கியாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் 9 லட்சத்து 12 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் வாயிலாக மீத்தேன் சமையல் கியாஸ் வழங்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது. இதற்கென மாவட்டம் முழுதும் 230 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெரிய இரும்பு குழாய்களும், 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலி எத்திலின் குழாய்களும் பதிக்கப்பட இருக்கிறது.

இது தொடர்பாக ஐ.ஓ.சி.எல். மேலாளர் சுரேஷ் கூறியிருப்பதாவது “கேரள மாநிலம் கொச்சிக்கு வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் திரவ நிலையில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு எனப்படும் மீத்தேன் கியாஸ் (சி.என்.ஜி.) கொண்டுவரப்படும்.  இதையடுத்து அங்கிருந்து பெங்களூருவுக்கு அந்த மீத்தேன் சமையல் கியாஸ் குழாய் வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது. இவற்றில் கேரள மாநிலம் கூட்டாடு பகுதியிலிருந்து கோவைக்கு இரும்பு குழாய்கள் வாயிலாக மீத்தேன் கியாஸ் கொண்டுவரப்படும். அவ்வாறு கொண்டுவரப்படும் மீத்தேன் கியாஸ் பிச்சனூர் பகுதியிலிருந்து கோவையின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படும்.

கோவைமாநகர் மட்டுமல்லாது  மாவட்டத்திலுள்ள சிறு கிராமங்களுக்குகூட இந்த மீத்தேன் சமையல் கியாஸ் குழாய் வாயிலாக விநியோகம் செய்யப்படும். இதற்குரிய பணிகள் சென்ற 2019 ஆம் வருடம் துவங்கப்பட்டது. வரும் 2029 ஆம் வருடத்திற்குள் இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வீதிகள், சாலைகளுக்கு குழாய்கள் வாயிலாக மீத்தேன் கியாஸ் கொண்டுசெல்லப்பட்டு, பிறகு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

இதற்கென ஒவ்வொரு வீட்டின் சமையல்அறை பகுதியில் மீட்டர் பொருத்தப்பட்டு கியாஸ் பயன்பாடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கிடையில் கோவை மாநகரில் மட்டும் 6 லட்சம் உட்பட மாவட்டம் முழுவதும் 9 லட்சத்து 12 ஆயிரம் வீடுகளுக்கு இந்த இணைப்பு கொடுக்கப்படும். இப்போது மதுக்கரை, எட்டிமடை, குறிச்சி, எட்டிமடை போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு வரும் மார்ச் மாதத்திற்குள் இணைப்பு கொடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது டெல்லி, குஜராத், மும்பை ஆகிய இடங்களில் வீடுகளுக்கு வெற்றிகரமாக மீத்தேன் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |