Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… அடுத்தவர் விஷியத்தில் கருது கூறாதீர்கள்.. எதிலும் நிதானம் தேவை..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தயவுசெய்து அடுத்தவர் விஷயத்தில் கருத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வருகின்ற இடையூறுகளை சரி செய்வது ரொம்ப நல்லது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடு படுவார்கள். இன்று  நண்பர்கள் உறவினர்களின் மூலம் நன்மை ஏற்படும். எதிலும் நிதானமான போக்கு கொஞ்சம் இருக்கும். காசு கையில் வந்து சேரும். நவீன பொருள் சேர்க்கைகளும், ஆடை ஆபரணம் சேரும்.

பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வீடு மனை வாங்க கூடிய யோகம் இன்றைக்கு உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். இன்று  மாணவர்களும் பொதுமக்களும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக இந்திய அரசாங்கத்தால்  சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விஷயத்தையும் நாம் அலட்சியம் காட்டாமல் அந்த விஷயத்தை மேற்கொண்டு சிறப்பாக செய்ய வேண்டும்.

மற்ற நாடுகளில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு காரணமே அந்த நாட்டுடைய அலட்சிய போக்கு தான் காரணம். தயவுசெய்து இந்த விஷயத்தில் நாம் எந்த அலட்சியப் போக்கையும் காட்டாமல் தயவுசெய்து, அரசாங்கத்தோடு நாம் கைகோர்த்து இந்த வைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்து விட நாம் பாடுபட வேண்டும். நம்முடைய குழந்தைகளை காக்க வேண்டும். அது மட்டும் இல்லை நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் முழுமையாகவும், தேசத்தின்  நலனுக்காகவும் அலட்சியம் காட்டாமல் நாம் செயல்பட வேண்டும். இன்று  ஒருநாள் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது.

 அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |