Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள்.. இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று கடினப்பட்டு காரியங்களை செய்தாலும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும். இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். மற்றவர் உங்களைப் பார்த்து பொறாமைப் படுவார்கள். யாரிடமும் பேசும்பொழுது நிதானத்துடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். உபரி பண வருமானம் வந்து சேரும். பெண்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள்.

நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்து வெளியூரிலிருந்து கிடைக்கக்கூடும். இதனால் நீங்கள் மகிழ்ச்சி அடையக் கூடும். மற்றவர்கள் மீது அதிக அன்பு செலுத்திவீர்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மட்டும் சில வாக்குவாதங்கள் வந்து செல்லும், கவலை வேண்டாம் அதும்  மாலை நேரத்தில். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளின் நலனிலும் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |