மீனம் ராசி அன்பர்களே.! பொறுமையை விட்டுவிட வேண்டாம்.
இன்று எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை இருக்கின்றது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் உங்கள் கையில் வந்து சேரும். வாழ்க்கை துணையும் பக்கபலமாக இருப்பார்கள். வாழ்க்கை துணை உறவுகள் மூலம் உன்னதமான சூழல் உருவாகும். அங்கிருந்து வரக்கூடிய தகவல்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக நடக்கும். அலுவலக பணி முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுபீர்கள். பணிச்சுமை ஏற்பட்டாலும் உடல் நலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. வியாபாரம் நல்லபடியாக நடக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தொலைபேசி வழி தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். பொறுமையை விட்டுவிட வேண்டாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த கூடிய இடத்தில் இருப்பார்கள்.
குடும்பத்தில் தடைபட்ட காரியங்களில் தடைகள் நீங்கி விடும். சுபகாரிய பேச்சுகள் சிறப்பை கொடுக்கும். உயர்வான எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் வெளிப்படும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நிதானமான போக்கினால் எல்லாம் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் பாடங்களை படிக்க கூடிய சூழல் உருவாகும். விருப்பங்கள் நிறைவேறும். பெண்கள் எதையும் திறம்பட செய்வீர்கள். காதலில் பிரச்சினை ஏற்பட்டால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கண்டிப்பாக மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க கூடிய சூழல் உருவாகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 1 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் வெள்ளை