மீனம் ராசி அன்பர்களே..! இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். சுபச் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் உதிரி வருமானம் வந்து சேரும். வீடு கட்டும் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல் நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அடையக்கூடும். சிலர் நினைத்தவரையே கைபிடிப்பீர்கள். இன்று எதிலும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். உங்களுடைய மனமும் இன்று அமைதியாகவே இருக்கும். மாணவச் செல்வங்கள் மட்டும் கொஞ்சம் நிதானமாக இருந்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை கண்டிப்பாக எழுதிப்பாருங்கள். தேர்வை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை, சிறப்பாகவே நீங்கள் செயல்படுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்