மீனம் ராசி அன்பர்களே..! இன்று முன்னேற்பாடுடன் சில முக்கிய பணியை மேற்கொள்வீர்கள். சிலரது பேச்சு உங்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும் தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்க கூடுதலாக உழைப்பீர்கள். பணவரவு ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். ஆனால் சராசரி அளவில் தான் இருக்கும். சுற்றுப்புற சூழ்நிலையில் தொந்தரவு இருக்கும். நிலுவையில் தாமதம் ஏற்படலாம். அதனால் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று சமையல் செய்யும் பொழுது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும்.
பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள், தேர்வு முடியும் வரை நிதானமாக இருங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்வு முடியும் வரை உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், காரமான உணவுகளை தயவு செய்து உண்ண வேண்டாம், பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் முயற்சிகளை எடுத்து தேர்வு முடியும் வரை பாடங்களை படித்தால் போதுமானதாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினையும் பேசி தீர்த்துக் கொள்வது தான் நல்லது. தயவுசெய்து யாரேனும் ஒருத்தர் பின்வாங்கிச் செல்வது ரொம்ப நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்