மீனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீங்கள் கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவிகள் நல்லபடியாக கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். காதலர்களுக்கு காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுடைய மனசாட்சிப்படி இன்று நடந்து கொள்வீர்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள், வீண் செலவு அவ்வப்போது வந்து செல்லும். சில நேரங்களில் சம்பவம் நடக்கும். வயிறு பிரச்சினை வந்துசெல்லும் கவனம் இருக்கட்டும், வியாபாரத்தில் கூடுதல் லாபத்தை பெற உழைக்க வேண்டி இருக்கும்.
வாடிக்கையாளர்கள் ஆதரவு உங்களுக்கு நீடிக்கும். இன்று எந்த ஒரு செயலையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மட்டும் செய்யாமல் நிதானமாக செய்யுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இன்று இருக்கும். மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். ஆர்வம் மிகுந்து காணப்படும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் உங்களுடைய மனநிலை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு இரண்டு நிமிடம் தியானம் பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை உணவு கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப நல்லது. படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு இது உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம் .
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்டநிறம்: கருநீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்