Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்…வம்புகள் வேண்டாம்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உறவுகளின் தொல்லையால் வெறுப்பு கொஞ்சம் ஏற்படும். கோபத்தால் வம்புகளை  விலைக்கு வாங்காதீர்கள். தயவு செய்து கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். குறிக்கோளின்றி அலைய கூடிடும். வெற்றிக்கு கடின உழைப்பு தேவைப்படும். இன்று தொழில் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கப்பெறும். சரக்குகளை விற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள், வேகம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுடைய சிந்தனை திறனும் முற்றிலும் கூடும். நிதானத்தை மேற்கொள்ளுங்கள். தயவுசெய்து யாரிடமும் எந்தவித கோபமும் படாதீர்கள்.

இன்று மாணவர்கள் பொறுமையாக இருந்து கல்விக்கான முயற்சி செய்யுங்கள். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்த  படத்தை கண்டிப்பாக எழுதிப் பார்க்க வேண்டும். நினைவு வைத்துக் கொள்ள உதவும், அதே போல உங்கள் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் தியானம் இருந்த பின்னர் கல்வியை தொடர்வது ரொம்ப சிறப்பு. தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்க.ள் பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள், தூங்கச் செல்வதற்கு முன் பால் அருந்திவிட்டு செல்லுங்கள்.

நீங்கள் படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |