மீனம் ராசி அன்பர்களே..! இன்று சிலரது ஆசை வார்த்தைகளில் நீங்கள் ஏமாந்து விடக்கூடாது. தயவு செய்து கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும். வியாபாரத்தில் ரொம்ப முக்கியமாக ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். நண்பர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். நா அடக்கம் தேவைப்படும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். விருப்பமுள்ளவர்கள் சந்திக்கக்கூடும். அதேபோல உங்களுடைய விருப்பங்களும் ஓரளவு நிறைவேறும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் வரக்கூடிய சூழல் இருக்கும். கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும், அவ்வளவுதான் தொழில் வியாபாரத்தில் ஓரளவு மந்தமான சூழல்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். யாரிடமும் தேவைக்காக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் கவனமாகவே இருங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் அது போதும்.
நல்ல உணவை எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் கொஞ்சம் வரக்கூடும். என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்