Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..தேவைகள் பூர்த்தியாகும்.. சாமர்த்தியமாக பேசுங்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று பயணங்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும் நாளாகவே இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

அவற்றை ஆராய்ந்து பார்த்து தான் செய்யவேண்டும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி பொங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மீன ராசி நேயர்களுக்கு இன்று உடலில் வசீகரத் தன்மை கூடி, காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கிறது இருந்தாலும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். பெண்களால் மனநிம்மதியும், அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக  கடுமையாக உழைப்பார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி இரண்டு நிமிடம் தியானம் பெற்ற பின்னர் கல்வியை தொடங்குவது ரொம்ப சிறப்பு.

தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் கண்டிப்பாக தியானம் செய்யுங்கள் செய்தபின்பு பாடங்களைப் படியுங்கள். படித்தபின் ஒரு முறைக்கும், இரு முறை எழுதிப் பாருங்கள் இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் நீல நிறம்

Categories

Tech |