Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு.. நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.. எதிர்பார்த்த பயணங்கள் அலைச்சலை கொடுக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணப்புழக்கம் உங்களுக்கு அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து நல்ல தகவலும் உங்களுக்கு வந்து சேரும். மனைவி புத்திரர்களின் உடல்நிலை ஓரளவு சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் கொஞ்சம் இருக்கும்.

எண்ணியபடியே செயல்களை செய்து காரியத்தை வெற்றி காண்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலங்களும் வீண் செலவுகளும் கொஞ்சம் ஏற்படக்கூடும். எதைச் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் சாமர்த்தியமாக செய்வது ரொம்ப நல்லது. பொறுமையாகவும் நிதானமாகவும் எந்த செயலையும் கடைபிடியுங்கள்.  மிக முக்கியமாக அரசாங்க ஊழியரிடம் வாக்கு வாதங்கள் எதுவும் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லது. நிதி மேலாண்மையில் கவனம் கொள்ளுங்கள். பணப்பரிவர்த்தனை இன்னும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.

அக்கம்பக்கத்தாரிடம் எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக நீங்கள் கையாள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு, மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு எப்பொழுதுமே அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |