மீனம் ராசி அன்பர்களே…! இன்று மனதில் அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். அன்றாட பணிகளை அதிக பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். உணவுப் பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்துக்கள் தெரிவிக்கக் கூடும். எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் ரொம்ப நல்லது.
இன்று மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கொஞ்சம் கடினமாகவே இருக்கும். ஆகையால் இன்று லக்ஷ்மி தேவியை வழிபட்டு பாடங்களை படிப்பது தொடங்குங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள் ரொம்பவும் சிறப்பாகவே இருக்கும். முடிந்தால் இரண்டு நிமிடம் தியானத்திற்கு பின்னர் பாடங்களை படிப்பது ரொம்பவும் சிறப்பு. இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்