Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..நல்ல தகவல்கள் வந்து சேரும்.. முயற்சிகள் வெற்றியாகும்..!!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி வாய்ப்புகள் பரிபூரணமாக கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் வாங்க கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக மட்டும் உழைக்க வேண்டி இருக்கும். அதுமட்டுமில்லை இன்று விருந்து விழாக்களில் கலந்து கொள்ள சூழ்நிலை இருக்கிறது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இன்று கலந்து கொண்டு உங்களுடைய மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்வீர்கள். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாகத்தான் இருக்கும். காதல் கைகூடும். திருமண முயற்சியும் ரொம்ப சிறப்பாகவே நடைபெறும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று சூரிய நமஸ்கார வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

 

Categories

Tech |