Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…புதிய பாதை புலப்படும்..கூடுதல் உழைப்பு தேவை..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று புதிய பாதை புலப்படும் நாளாகவே இருக்கும். புகழ் மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். தொழில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு ஆச்சரியப்படவைக்கும் . வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பிரச்சினைகள் பற்றி பிறரிடம் பேச வேண்டாம், ரகசியங்களை கூடுமானவரை பாதுகாத்திடுங்கள்.

கூடுதல் உழைப்பு தேவைப்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். பணவரவை விட புதிய இனங்களில் செலவுகள் கூடும். வாகனத்தில் கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது தொலைபேசியில் பேசிக்கொண்டு எல்லாம் செல்ல வேண்டாம். நிதானத்தை கடைபிடித்தாலே போதும். கூடுமானவரை இன்று யாரிடமும் செலவுக்காக கடன் வாங்க வேண்டாம்.

பொறுமையாக இருங்கள், நிதானமாகவே செயல்படுங்கள். மன அமைதி பெறுவதற்கு தியானம் போன்றவைகளில் ஈடுபடுவது ரொம்ப சிறப்பு. இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும். மிக சிறப்பாகவே இருக்கும். கூடுமானவரை சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |