மீனம் ராசி அன்பர்களே..! இன்று பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். முக்கிய நபர்களிடமிருந்து முக்கியமான உதவிகள் இன்று உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தின் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையை கொடுக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவர திட்டமிடுவீர்கள். இன்று வியாபாரம் தொடர்பாக அலைச்சலும், புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
நீங்கள் எடுக்கும் காரியங்களில் ஓரளவு அனுகூலமான பலனை பெறுவீர்கள். பணவரவுகளில் இருந்த பிரச்சனைகள் விலகி, கடன்கள் படிப்படியாக குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் கூட அனுகூலமான பலனை இன்று நீங்கள் அடைய முடியும். காதலர்களுக்கு இன்று பொன்னான நாளாக அமையும். காதல் கைகூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்