மீனம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோக வாய்ப்புகள் கைகூடும் நாளாகவே இருக்கும். சொந்த பந்தங்களில் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். இன்று ஓரளவு சிறப்பான முன்னேற்றத்தை பெற முடியும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று திடீரென்று புதிய நபர்களால் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும். மதியத்திற்கு மேல் மனகுழப்பம் கொஞ்சம் இருக்கும். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபத்தை கொஞ்சம் அடைய முடியாது.
கொடுக்கல், வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் ஏற்படும். வம்பு வழக்குகள் ஓரளவே சாதகமான பலனை கொடுக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது தான் இன்றைய நாள் ரொம்ப நல்லது. யாரிடமும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம். யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். மிக முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் போது நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள், அது போதும். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்தே பாடங்களைப் படியுங்கள். நிதானத்துடன் செயல்படுங்கள் படித்ததை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்