மீனம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரிடமும் இயல்புடன் பழகுவீர்கள். நண்பரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். யாரைப்பற்றியும் நீங்கள் குறை சொல்ல வேண்டாம். ரகசியங்களை மிக முக்கியமாக பாதுகாக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது ரொம்ப நல்லது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்லக் கூடும். இன்று கொஞ்சம் கடன் வாங்க நேரிடும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.
ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியை சரிவர செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் ஆதரவை இழக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சிரமமான சூழ்நிலையை அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும், பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக நடந்து கொள்ளுங்கள். உணவு பொருட்களை நீங்கள் ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் கருநீல நிறம்