மீனம் ராசி அன்பர்களே..! இன்று புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும் நாளாகவே இருக்கும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோக சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.
கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுங்கள். திடீர் செலவுகள் கொஞ்சம் ஏற்படும், பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நிலையில் ரொம்ப கவனமாக தான் இன்று இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப சிறப்பு. இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள், படித்ததை எழுதிப் பார்ப்பது மிகவும் நல்லபடியாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு எப்பொழுதுமே ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்