மீனம் ராசி அன்பர்களே..! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாகவே இருக்கும். குடும்ப சுமை கூடும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அருகில் உள்ளவர்களின் ஆதாயம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் மிக சிறப்பாகவே இருக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறும்படி நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும்.
நிலுவையில் உள்ள பணங்கள் கையில் வந்து சேரும். கொடுக்கல்-வாங்கலில் எந்தவித மாற்றமும் இல்லை. இதை மட்டும் கொஞ்சம் கடைபிடியுங்கள் அது போதும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். உங்களுக்கு நிம்மதியாக இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் கொஞ்சம் கடினமான முயற்சிக்கு பின்னரே வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் . தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். மதிப்பெண்களும் கூடுவதற்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.பழ வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள், இரவில் தூங்கச் செல்லும் போது பால் வகைகளை எடுத்துக் கொள்வது ரொம்ப சிறப்பு. பால் அருந்தி விட்டு சென்றாள் மனம் நிம்மதி ஆகவே இருக்கும். மனம் நிம்மதி பெற்றாலே கல்வியில் எளிதாக வெற்றி பெறலாம். அதுமட்டுமில்லை முடிந்தால் இரண்டு நிமிடம் தியான மேற்கொண்டு பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது.
படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்