மீனம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும். பணம் கைக்கு வந்த நிமிடங்களிலேயே இன்று செலவாகும். தொழில் முயற்சிகளில் புதியவர்கள் பிரச்சினைகள் கொஞ்சம் இருக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. இன்று வீண் கவலை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வதால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தயவுசெய்து தவிர்க்கவேண்டும்.
பாடத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நிதானத்தை மேற்கொள்ள வேண்டும். கடுமையாக பாடங்களை படித்து எழுதிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். கணவன்-மனைவிக்கு இடையே இன்று அன்பு கூடும். இருந்தாலும் பேசும்பொழுது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, நிதானத்தை கொஞ்சம் கடைபிடிப்பது எப்பொழுதுமே நல்லது. அக்கம்பக்கத்தாரின் அன்பு உங்களுக்கு இருக்கும் வசீகரமான பேச்சு காதல் வயப்பட கூடிய சூழலும், இன்று அமையும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் . அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமிக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்