மீனம் ராசி அன்பர்களே ..! இன்று வருமானம் உங்களுக்கு இருமடங்காகும். மனதிற்கு திருப்தியாக இருக்கும் .நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தகவல் மன மகிழ்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும். வேலையை விட்டுவிட்டு வேறு ஏதேனும் வேலைக்கு செல்லலாமா என்ற சிந்தனை உங்களுக்கு அவ்வப்போது வந்து செல்லும். குடும்பத்தினரின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து கொண்டிருப்பீர்கள். இன்று இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் கொஞ்சம் சோர்வு இருக்கும்.
தேவையில்லாத விஷயத்தை போட்டு மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பீர்கள், தயவுசெய்து வேண்டாம். கூடுமானவரை தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள், ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையான அணுகு முறையால் காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே செய்வீர்கள். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியமும் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும்.
இன்று தூரதேசத்திலிருந்து வரும் தகவல்கள் உங்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன்-மனைவிக்கு இடையே அன்பு கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. நீலநிறம் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்