மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.7500 ஆக உயர்த்தி தரப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்
இன்று காசிமேட்டில் தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “மீனவர்களின் நலனில் என்றும் அக்கறையோடு இருக்கும் ஒரே அரசு அதிமுக அரசு.
அதிமுக ஆட்சியில் காசிமேடு துறைமுகம் ரூ.185 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.7500 ஆக உயர்த்தி தரப்படும்” என்று பதிவிட்டுள்ளார்