Categories
அரசியல் மாநில செய்திகள்

மீனவர்களுக்கு ஒன்னுனா…. மோடி அரசு துடிக்குது…. இது இந்தியாவிற்கு கேடு …!!

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையை சீனா முழுக்க வளச்சி போட்டுருச்சு, அவர்கள் இலங்கையை வளைத்து விட்டார்கள், இலங்கை அரசை அவர்கள் நசுக்கி விடுவார்கள், அவர்கள் அம்மன் தோட்டா துறைமுகத்தை கைப்பற்றி கொண்டார்கள், அவர்கள் 99 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்கள். எனவே இலங்கை அரசு சீனாவின் கைப்பிடிக்குள் இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக…. இது ஒரு கேடாக முடியும்.

இதை இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை, அவர்கள் நம்முடைய தமிழர்களை தாக்குவதை குறியாகக் கொண்டு உள்ளனர். ஆனால் இந்தியாவிற்கு விரோதமாக போக்கை கொண்டுள்ள சீனா இந்த பிரச்சினையிலும், மீனவர்கள்  பிரச்சனையிலே எப்படி தமிழக மீனவர்களுக்கு கேடு செய்கிறதோ, அதே நேரத்தில் குஜராத் மீனவர்களுக்கு ஒரு மீனவருக்கு ஆபத்து என்றாலும் மோடி அரசு துடிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது.

இங்கே தமிழக மீனவர்கள் எவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட போதும் அதை கண்டிக்கவும் இல்லை, கண்டனம் தெரிவிக்கவும் இல்லை, இதனுடைய விளைவுகளை எல்லாம் இலங்கை அரசு அனுபவிக்க தான் வேண்டும் என தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்து சந்தேகம் ஏற்கனவே எழுப்பப்பட்டு இருந்தது. மரணத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையும் இருந்தது. தற்போது அந்த நிலைப்பாட்டில் ஏதாவது மாற்றம் இருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், இது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று என வைகோ தனது கருத்தை கூறினார்.

Categories

Tech |