Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… மீன்வளத்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!!!

மீன்வளத்துறை அமைச்சர் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறால் வளர்ப்பு மேம்படுத்துவதற்காக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறால் பண்ணை உரிமையாளர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த இறால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதில் மீன் சார்ந்த தொழில்கள், தற்போதைய நிலைமை மற்றும் அதனை மேம்படுத்துவது தொடர்பாக கோரிக்கையை அவரிடம் முன்வைத்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தமிழ்நாட்டில் கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறால் வளர்ப்பு மேம்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளை பரிசீலனை செய்த தாகவும் அனைத்து கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் தற்போது கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகப்படுத்த முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மீனவர்களின் மகிழும்படி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |