Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு…. 3 நாள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இன்று குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்கிழக்கு, அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |