கொரோனாவை அடுத்து தற்போது கடல் நோய் ஒன்று பரவி வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பேரழிவை ஏற்படுத்தி,பொதுமக்களை பயமுறுத்தி வரும் நிலையில், இப்போது புதிய நோய்கள் பரவி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பொலிவியாவில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலை தொடர்ந்து இப்பொழுது ஆப்பிரிக்க நாடான செனகலின் தலைநகரான டைகரில் மர்மமான கடல் நோய் ஒன்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் மீன்களை பிடிக்க போகும் மீனவர்களுக்கு தொடர்ந்து நோய் பரவி வரும் நிலையில் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இந்த புதிய நோயின் அறிகுறியோடு மீனவ வாலிபர் ஒருவரிடம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அது நூற்றுக்கணக்கான மீனவர்களுக்கு பரவியது. இந்த நோய் குறித்து உறுதியான செய்தி எதுவும் தெரியவில்லை என்று செனகலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிகுறிகள் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இந்நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க 500க்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் சருமத்துடன் சம்மந்தமான இந்த தொற்று நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. சருமத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்ட பின் அந்த பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி வலி ஏற்படுவதால் இந்த விஷயம் பயமுறுத்துவதாக உள்ளது. மேலும் இது மிக வேகமாக பரவுகிறது என்று கூறப்படுகிறது.