Categories
மாநில செய்திகள்

“மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!!

மன்னர் வளைகுடா கடல் பகுதியில் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி, கீழக்கரை, பாம்பன், வாலி நோக்கம் போன்ற துறைமுகங்களில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் தென்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டிசம்பர் 19-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |