கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில் முன்விரோதம் காரணமாக 25க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட தோடு,பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக, இரு கோஷ்டியினர் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து தாழங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 25க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மேலும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக தாழங்குடா பகுதியில் பதற்றம் நீடித்து வருவதால், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணிகளுக்காக குவிக்கப்பட்டனர்.