மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அனைத்து மண்டல இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்களுக்கு மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் வங்கக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மீனவர்கள் நாளை முதல் 21-ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது.
மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.