Categories
உலக செய்திகள்

மீனவர்கள் சென்ற படகு….. குளிரில் மூழ்கியதால்…. நேர்ந்த விபரீதம்….!!

மீனவர்கள் சென்ற படகு ஒன்று உறையவைக்கும் குளிரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ரஷ்யாவில் இன்று காலை 7 மணியளவில் உறையச் செய்யும் குளிரில் மீனவர்கள் சென்ற படகு ஒன்று மூழ்கியுள்ளது. மீனவர்கள் சென்ற இந்த படகின் அடிப்பகுதியில் பனி உறைந்து இருந்துள்ளது. இதனால் படகின் எடை அதிகமாகியிருக்கிறது. இதனால் இந்த படகு கடலில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த பகுதியானது ஆர்க்டிக் பகுதி எனவே தண்ணீரின் வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸில் இருந்திருக்கிறது.

மேலும் படகில் 19 மீனவர்கள் இருந்துள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று ரஷ்யா தெரிவித்திருக்கிறது. மேலும் இப்படகில் இருந்த இரண்டு பேர் மட்டும் உயிரிழந்த நபரின் உடலை தூக்கிக்கொண்டு அலைகளால் அடித்து வரப்பட்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த மற்றொரு படகு அவர்கள் இருவரையும் உயிருடன் மீட்டுள்ளது. மேலும் காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Categories

Tech |