மீனவர்கள் பிரச்சினை மூலம் அரசியல் செய்கின்றது திமுக என எல் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் வேல்முருகன் பேசியதாவது: “திமுக ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்திருந்தது. எப்போது திமுக ஆட்சி வந்ததோ அப்போது தான் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. காரணம், மீனவர்கள் பிரச்சினை மூலமாக திமுக அரசியல் செய்ய நினைக்கின்றது. இதில் விரைந்து நடவடிக்கைகளை எடுப்பதில்லை. சொல்லபோனால் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க நினைக்கிறது. ஆனால் தமிழக அரசு அதற்கு முயற்சி செய்யவில்லை.
மீனவர்கள் பிரச்சினை மட்டுமல்லாமல் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இந்த நிதியாண்டில் இரண்டு தவணைகளாக ரூ. 6,655 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஒரு நிதி ஒதுக்கீட்டை மறைத்து விட்டு முதல்வர் ஸ்டாலின் அரசியல் நாடகத்திற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.