மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் 2 கிலோ எடையுள்ள இரண்டு அதிசய சிங்கி இறால் சிக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டைப்பட்டினம் என்ற பகுதியில் உள்ள மீனவர்கள் நேற்று முன்தினம் விசைப் படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் வழக்கம்போல் மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பியுள்ளனர். அப்போது ஒரு மீனவரின் வலையில் 2 கிலோ எடையுள்ள இரண்டு அதிசய சிங்கி இறால் சிக்கி இருப்பதை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
அதன் சராசரி விலை 2000 முதல் நான்காயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் மீன்கள் ஏற்றுமதி செய்யப் படாத காரணத்தால் அந்த இறால் விலை மிகக் குறைந்த விலைக்கே விற்பனையாகியுள்ளது.