தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.
இதனால் புதுச்சேரி முழுவதுமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை, கன்னியாகுமரியில் நாளை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி,மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனால் இன்று 7 மணி முதல் மீனாட்சியம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.