கணவர் மரணத்திற்கு பிறகு மீனா தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருகின்றார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக மாறி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மீனா. இவரின் கணவர் வித்தியாசர் சென்ற ஜூன் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். சென்ற சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு மீனா வீட்டிலேயே முடங்கி இருந்தார்.
தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் அண்மையில் மீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தோழிகள் பலரும் நீரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது. இந்த நிலையில் மீனா வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் மாடர்ன் லுக்கில் அட்டகாசமாக இருக்கின்றார். இவரின் இந்த வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் மீனா இஸ் காம்பேக் என பதிவிட்டு வருகின்றார்கள்.