தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார்.
ஆனால் காலதாமதம் காரணமாக நுரையீரல் கடக்காமல் போனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மீனா தன்னுடைய கணவர் இறந்த சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். அண்மையில் கூட தன்னுடைய உடலை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய பதினெட்டாவது திருமண நாளை கலா மாஸ்டர் நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில் அந்த விழாவிற்கு மீனாவை வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் மீனா தான் ஊரில் இல்லை என்று கூறியதால் மாஸ்டர் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார். இதனை அடுத்து கலா மாஸ்டர் தன்னுடைய திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மீனா அங்கு வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். திருமணநாள் விழாவில் மீனா கலந்து கொண்டதால் கலா மாஸ்டர் சந்தோசத்தில் அழுதுள்ளார். இதுகுறித்து புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CiB9HL5L7mj/