இங்கிலாந்து நாட்டில் மீனின் வாய்க்குள் புகுந்து நாக்கை தின்னும் வித்தியாசமான ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் இருக்கும் சபோல்க் என்னும் நகரத்தில் இறக்குமதியான மீன்களில் ஒரு மீனின் வாய் மட்டும் வித்தியாசமாக இருந்துள்ளது. அது, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதன்படி வெளியான தகவலில். அந்த மீனின் வாய் பகுதியில் நாக்கு இருக்கும் இடத்தில் ஒரு ஒட்டுண்ணி இருந்திருக்கிறது.
சிமோதோவா எக்சிகுவா என்ற பெயர் கொண்ட இந்த ஒட்டுண்ணி மீனின் சுவாச பகுதியினுள் சென்று வாய்க்குள் புகுந்திருக்கிறது. அதன் பிறகு நாக்கை தின்று அதன் மீதி பகுதியில் இருந்து கொண்டு புதிய நாக்காகவே உருமாறி விட்டது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவிலும் இந்த ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், இந்த ஒட்டுண்ணியால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறக்குமதியான அந்த மீன் பெட்டியை எந்த நாட்டில் இருந்து வந்ததோ அதே நாட்டிற்கு மீண்டும் அனுப்பிவிட்டனர்.