சுவிஸ் நதி ஒன்றில் உள்ள மீன்களை காப்பாற்றதீயணைப்பு வீரர்கள் புதிய நீரை பாய்ச்சி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து Dardagny என்ற இடத்திலுள்ள நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்துவிட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும் நதியில் உள்ள மீன் போன்ற உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நதியில் புதிய நீரை மின் மோட்டார் மூலம் தீயணைப்பு வீரர்கள் பாய்ச்சி வருகின்றனர். இதனிடையே சில மீன்கள் செத்து மிதந்தும் வருகிறது.
எனவே தீயணைப்பு வீரர்கள் நதிக்குள் புதிய நீரை சேர்த்து ஆக்சிஜன் அளவை அதிகரித்து வருகின்றனர். மேலும் புதிய நீர் சேர்க்கப்பட்டு வருவதால் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து மீன்கள் போன்ற உயிரினங்கள் காப்பாற்றப்படும் என்றும் இதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.